நாடு பூராகவும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெற்றிடங்கள் நிலவும் கிராம அலுவலர் பிரிவுகளில் கிராமசேவகர் களை நியமிப்பதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்து கொள்வதற்காக தகமை உள்ள ஆண் பெண் இருபாலரிடமும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன..

விண்ணப்பதாரிகள் ஆறாம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில் தாம் தகைமை பெறும் பிரதேச செயலாளர் பகுதியில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பிரதேச செயலாளர் பகுதிகள் மற்றும் மாவட்டங்கள் பற்றிய விபரங்கள் முதலாம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் தான் விண்ணப்பிக்கும் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதன் இலக்கம் என்பவற்றை அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி சரியாக விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட இடத்தில் குறிப்பிடுதல் வேண்டும்..

விவரங்களை தெளிவாகக் குறிப்பிடும் போது விண்ணப்பதாரர் ஒருவருக்கு ஏற்படும் எந்த ஒரு நஷ்டம் தொடர்பாகவும் கொடுக்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி பரீட்சை தொடர்பான விபரங்கள்

போட்டிப் பரீட்சையை மூன்று மொழிகளிலும் நடைபெறும்.அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் நடத்தப்படும் எனினும் பரீட்சை மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க போதுமான அளவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்காத மாவட்டங்களில் நடாத்துவது கடினம் என்பதால் அந்த குறித்த மாவட்டத்திலுள்ள விண்ணப்பதாரிகள்  வேறொரு பரீட்சை மத்திய நிலையத்தை தெரிவு செய்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒரு மொழியில் மாத்திரம் தோற்றுதல் வேண்டும். விண்ணப்பிக்க படும் மொழி மாற்றப் படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

போட்டி பரீட்சை:

மொழியாற்றல்1 மணித்தியாலம், 30 நிமிடங்கள்100 புள்ளிகள்
பொதுஅறிவு, உளச்சார்பு1 மணித்தியாலம், 30 நிமிடங்கள்100 புள்ளிகள்

விண்ணப்ப முடிவுத் திகதி: 28.06.2021

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Commissioner General of Examinations “Branch of Institutional Examinations Organizing Branch” Department of Examinations, “PO Box 1503”, Colombo, Sri Lanka.

தற்பொழுது சிங்கள மொழியிலான வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே வெளியாகி உள்ளது.தமிழ் மொழியில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் நமது இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் குழுமங்களில் பகிரப்படும்.. நமது வாட்ஸ்அப் குழுமத்துடன் இணைந்து இருங்கள்..

SINHALA GAZETTEDOWNLOAD
TAMIL GAZETTEPENDING
ENGLISH GAZETTEPENDING